Friday, November 2, 2012

Cancelled TNPSC Group 2 Question & Answers

Date of Exam: 12/08/2012

பொதுத்தமிழ்

1. பொருந்தா இணையைக் கண்டறிக
A) திருநூற்றந்தாதி - திருக்கலம்பகம்
B) திருவெம்பாவை - ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்
C) பிம்பசாரக்கதை - பெருங்கதை
D)சித்தாந்தத் தொகை - திருப்பதிகம்
விடை: B) திருவெம்பாவை - ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்

2. எதிர்பார்ப்பு
விடை: C) சூல் கொண்ட மேகம் போல

3. குழந்தைக் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார்?
விடை: A) அழ வள்ளியப்பா

4. கொங்குவேள் மாக்கதை அகவற் காப்பியம்
விடை:  A) பெருங்கதை

5. பட்டியல் I ஐ பட்டியல் II - ல் பொருத்துக
விடை - C)
சரியாக பொருத்திய விடைகள்
1. பண்புத் தொகை- வெள்ளெயிறு (ஈ)
2. வினைத்தொகை - ஈன்குழவி (அ)
3. உவமைத்தொகை - பூதரப்புயம் (ஆ)
4. உம்மைத்தொகை - கபிலபரணர் (இ)

6.  பட்டியல் I ஐ பட்டியல் II - ல் பொருத்துக
விடை - B)
சரியாக பொருத்திய விடைகள்
1. ஓடக் காண்பது - பூம்புனல் வெள்ளம் (இ)
2. வாடக் காண்பது - மின்னார் மருங்கு (ஈ)
3. போடக் காண்பது - பூமியில் வித்து (அ)
4. தேடக் காண்பது - நல்லறம் கீர்த்தி (ஆ)

7. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
விடை:  A) நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே

8. 'கூடற்றமிழ்' என்று அழைக்கப்படும் நூல் எது?
விடை:  D) மதுரைக் காஞ்சி

9. பொருந்தா இணையைக் கண்டறிக
A) அலமாரி - நெடும் பேழை
B) சாவி - திறவுகோல்
C) பேட்டை - நகரம்
D)மிட்டாய் - தீங்கட்டி
விடை: C) பேட்டை - நகரம்
10. 'நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
       நீரினும் ஆரள வின்றே' - இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
விடை - B) குறுந்தொகை

11. 'மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
        அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு' - இக்குறளில் இணை எதுகையாவது?
விடை:  A) மறந்தும் - பிறன்கேடு

12. பொருந்தா இணையைக் கண்டறிக
A) இடும்பை - நடலை
B) மறம் - அன்பு
C) அவல் - பள்ளம்
D)மிசை - மேடு
விடை: B) மறம் - அன்பு

13. வாழாதார் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
விடை: C) எதிர்மறை வினையாலணையும் பெயர்

14. பொருந்தா இணையைக் கண்டறிக
A) இடுகுறிப்பெயர் - மண்
B) காரணப் பெயர் - \ங்கில்
C) இடுகுறிப் பொதுப் பெயர் - காடு
D)காரண சிறப்புப் பெயர் - வளையல்
விடை: B) காரணப் பெயர் - \ங்கில்

15. பொருந்தா இணையைக் கண்டறிக

A) செந்நிறக்கோள் - புதன்
B) ஞாயிறு கோள் - விடிவெள்ளி
C) பெரிய கோள் - வியாழன்
D) கந்தகக் கோள் - சனி
விடை: A) செந்நிறக்கோள் - புதன்

16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
      "உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்"

விடை: C) பேரின்ப வீட்டின் திறவுகோல் எது?

17. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
விடை: B) ‘புனலிடை \ழ்கி பொழிலிடை உலவிப்’

18. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
விடை: A) அடக்கம் முதலிய குணங்கள் சேர்ந்து பெண்மை ஆகின்றன.


19. பொருந்தா இணையைக் கண்டறிக
A) கொடுங்குன்றம் - பிரான்மலை
B) திருஏரகம் - தீர்த்தனகிரி
C) பொதியில் - பாபநாசம்
D) ஆரைக்கால் - நாமக்கல்
விடை: B) திருஏரகம் - தீர்த்தனகிரி

20.‘பற்றுமரமில்லாக் கொடி போல’
விடை: B) ஆதரவின்மை


21.  பட்டியல் I ஐ பட்டியல் II - ல் பொருத்துக
விடை - A)
சரியாக பொருத்திய விடைகள்
1. அழலவன் - சூரியன் (ஆ)
2. அழலுதல் - எரிதல் (அ)
3. அழலை - களைப்பு (ஈ)
4. அழல் - நெருப்பு

22. ‘தெருளும் திறம் தெரிதல் அல்லால், வெருள எழுந்து’ - எது தொழிற் பெயர்?
விடை: B) தெரிதல்

23. கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக
       என்றென்றும் தலைநிமிர்ந்து வாழ்வோம்! வெல்வோம்!
விடை: C) அடுக்குத்தொடர், தன்மை பன்மை வினைமுற்றுகள்


24.  பட்டியல் I ஐ பட்டியல் II - ல் பொருத்துக
விடை - C)
சரியாக பொருத்திய விடைகள்
1. மருதை - பக்கம் (ஈ)
2. நாவாய் - படகு (அ)
3. பவித்ரம் - தூய்மை (ஆ)
4. முடுகு - செலுத்து (இ)

25. ‘பெயரெச்சம்’ என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க
விடை: C) பொருள் முற்றுப் பெறாத வினைச்சொல்

26. பெறாஅ - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
விடை: B) இசைநிறையளபெடை

27. ‘எண்பொருளவாகச் செலச்சொல்லி தான் பிறர்வாய்
       நுண்பொருள் காண்ப தறிவு’ - இக்குறளிலுள்ள எதிர்ச்சொல் எது?
விடை: D) எண்பொருள் x நுண்பொருள்

28. பின்வருவனவற்றுள் எது தவறான விடை?
A) முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை
B) இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை
C) \ன்றாம் எழுத்து ஒன்றி வருவது முரண்
D) ஈற்றெழுத்து ஒன்றி வருவது இயைபு
விடை: C) \ன்றாம் எழுத்து ஒன்றி வருவது முரண்

29. தொடைகளின் வகைகள் எத்தனை?
விடை: D) ஏழு

30. பின்வருவனவற்றுள் மோனைக்கு தொடர்பில்லாதது எது?

A) மாசில் - வீணையும்
B) மாலை - மதியமும்
C) வீங்கிள - வேனிலும்
D) ஈசன் - எந்தை.
விடை: A) மாசில் - வீணையும்

31. சரியான பிரித்தறிதலை கண்டறிக

விடை: B) சேவடி - செம்மை + அடி

32. தவறான பிரித்தறிதலை கண்டறிக

A) ஒருவற்கு - ஒருவன் + கு
B) தமிழிலிலா - தமிழில் + இலா
C) ஆற்றுப்பாலம் - ஆற்று பாலம்
D) கற்சிலை - கல் + சிலை
விடை: C) ஆற்றுப்பாலம் - ஆற்று பாலம்

33. பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலை கண்டறிக

A) ஏந்தி = ஏத்து + இ
B) போற்றி = போற்று + இ
C) எய்தி = எய்து + இ
D) தோன்றி = தோன்று + இ
விடை: A) ஏந்தி = ஏத்து + இ
34. பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் சரியான பிரித்தறிதலை கண்டறிக
விடை: B) பொறுத்தல் = பொறு + த் + தல்

 35. பின்வரும் பத்தியிலுள்ள எதிர்ச்சொல் எது?
       ‘தமிழ்மொழியினுதவி / களையப்படின், தெலுங்கு முதலியன
        இயங்குதலொல்லா; மற்றுத் தமிழ்மொழி அவற்றினுதவி யில்லாமலே 
        சிறிது மிடர்ப்படுதலின்றித் தனித்து இனிமையின் இயங்க வல்லது.’




விடை: C) இயங்குதலொல்லா x இயங்கவல்லது

36. தன்வினை வாக்கியத்தை கண்டறிக
விடை: B) அன்புச்செல்வி கட்டுரை எழுதினாள்



37.  பட்டியல் I ஐ பட்டியல் II - ல் பொருத்துக
விடை - D)
சரியாக பொருத்திய விடைகள்
1. கல் - குவியல் (ஈ)
2. ஆடு - மந்தை (இ)
3. திராட்சை - குலை (ஆ)
4. யானை - கூட்டம் (அ)

38. கீழ்க்கண்டவற்றுள் எது எதிர்ச்சொல் இல்லை?

A) இணங்குதல் x பிணங்குதல்
B) அரிதின் x எளிதின்
C) முகப்புரை x முடிவுரை
D) பேரிலக்கியம் x உறுதிப்பொருள்
விடை: D) பேரிலக்கியம் x உறுதிப்பொருள்

39. வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
விடை: D) எண்ணெய் விற்கும் பண்டகசாலை இதுவா?


40.  பட்டியல் I ஐ பட்டியல் II - ல் பொருத்துக
விடை - A)
சரியாக பொருத்திய விடைகள்
1. குழம்பு - சேறு (ஆ)
2. குளம்பு - விலங்கின்  அடி (அ)
3. குழு - கூட்டம் (ஈ)
4. குளுவை - பார்வை (இ)

41. முதன் முதலாக தமிழில் ஞானபீடப் பரிசினைப் பெற்றவர் யார்?
விடை: C) அகிலன்

42. தமிழில் தோன்றிய முதல் ‘உலா’ எது?
விடை: B) திருக்கயிலாய ஞான உலா



43.  பட்டியல் I ஐ பட்டியல் II - ல் பொருத்துக
விடை - B)
சரியாக பொருத்திய விடைகள்
1. Accurse - தெறுமொழி (ஈ)
2. Acidity - காடித்தன்மை (ஆ)
3. Acedia - கவனமின்மை (அ)
4. Acervate - குவிந்த (இ)

44. Bless: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பின்வருவனவற்றுள் எது தவறானது?

A) புனிதப்படுத்து
B) புகழ்
C) போற்று
D) வாழ்த்து
விடை: B) புகழ்

45. Tenet: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பின்வருவனவற்றுள் எது தவறானது?

A) அபிப்பிராயம்
B) கொள்கை
C) கருத்து
D) குடியிருப்பவர்
விடை: D) குடியிருப்பவர்





46.  பட்டியல் I ஐ பட்டியல் II - ல் பொருத்துக
விடை - B)
சரியாக பொருத்திய விடைகள்
1. காழகம் - ஆடை (ஆ)
2. காளகம் - எக்காளம் (அ)
3. காழம் - தூண் (ஈ)
4. காளம் - நஞ்சு (இ)










TNPSC தேர்வுகள் எழுதும் போது கவனிக்க வேண்டியவை

§ TNPSCதேர்வில் வெற்றி பெற முதலில் பொதுத்தமிழை நன்றாகப் படித்துக்கொள்ளுங்கள் அதுவே வெற்றியைத் தீர்மானிக்கிறது .
§  General Tamil -க்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் புத்தகங்களைப் படிப்பதே போதுமானது.
§ பலர் கடைசி வாரத்தில் தான் படிக்க வே ஆரம்பிக்கிறார்கள். அது தவறு.
§ TNPSC தேர்வில் வெற்றி பெற எண்ணுபவர்கள் தேர்வு அறிவிப்பு வெளிவந்த பின் படித்துக் கொள்ளலாம் என மெத்தனமாக இருப்பதே தவறு.
§ TNPSC தேர்வில் வெற்றி பெற எண்ணுபவர்கள் தினமும் ஒரு மணி நேரமாவது பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிப்பதற்கு ஒதுக்க வேண்டும். பாடங்களை திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். புரிந்து படிக்க வேண்டும்.
§ முக்கியமானவை எனத் தோன்றும் பகுதிகளை Notes எடுத்துக் கொள்ளலாம்.
§ தினசரி செய்தி தாள் படிக்கலாம் அல்லது தொலைக்காட்சியில் News பார்க்கலாம்.
முக்கிய செய்திகள் வெளிவந்தால் தேதி குறிப்பிட்டு ஒரு Note-ல் குறித்து வைத்துக் கொள்ளவும்.
இப்படிச் செய்தால் Year Books தேடி கடை கடையாக அலைவது கூட அவசியமில்லை.
§ கடைசி வாரத்தில் புதிய பாடங்களை படிக்கவே கூடாது. படித்த பாடங்களை திரும்பத்  படிக்க வேண்டும். அதாவது Revise செய்ய வேண்டும்.

Monday, October 29, 2012

TNPSC Group-2 பாடத்திட்டம்

பொதுத்தமிழ்
அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் 
     • 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள தமிழ் புத்தகங்கள்
     • சங்க நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள் பெயர்
     • சங்க இலக்கிய நூல்களின் சிறப்புப் பெயர்கள்
     • உவமைகளும் அவற்றால் விளக்கப்படும் உணர்ச்சிகளும்
     • தமிழ் நூலாசிரியர்களும் அவர்களின் சிறப்புப் பெயர்களும்
     • பெயர்ச் சொல் மற்றும் அதன் ஆறு வகைகள்
     • பள்ளிப் பாட செய்யுள் மற்றும் பாடல் வரிகள் (சொற்களை ஒழுங்கு படுத்தி
        சொற்றொடர் ஆக்குதலிலும் இடம் பெறும்) இடம் பெற்றுள்ள நூல் மற்றும்
        நூலாசிரியர்
     • பிற மொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்
     • எதுகை, மோனை, இயைபு தொடைகள் மற்றும் வகைகள்
     • சொற்களின் இலக்கணக் குறிப்பு
     • ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்